கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சான்றோர் குல நாடார் சங்கத்தின் தலைவர் K.R ராஜ்குமார் நாடார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் K.M பழனிச்சாமி நாடார் மற்றும் மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.இந்த நிகழ்விற்கு சங்கத்தின் செயலாளர் M.பழனிநாடார் வரவேற்புரை ஆற்றினார்.
மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் அண்ணாச்சி G. கரிகோல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார நாடார் குல மக்கள் திரளாக கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் முடிவில் சங்கத்தின் பொருளாளர் M.சாந்த மூர்த்தி நாடார் நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் ஜே. மகேந்திரன் நாடார்,சத்தியமூர்த்தி நாடார் ,வினோத் நாடார் திருவணப்பட்டி ஆசைத்தம்பி நாடார் மற்றும் மத்தூர் சுரேஷ் நாடார் தங்கதுரை நாடார் சம்பத் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.