பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்று வந்தது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை எண்.30, நாள்: 04.11.2022, நாளிட்ட அரசாணையை செயல்படுத்திட ஏதுவாக, இனி ஒவ்வொரு வாரமும் புதன் (அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) கிழமைகளில், கை, கால் இயக்க குறைபாடுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மை உடையவர்கள் அல்லது உயரம் குறைவானவர்கள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர் ,
அமில வீச்சு பாதிப்புக்குள்ளானவர்கள் (Acid Attack Victims) , பார்வையற்றோர், பார்வை குறைபாடுடையோர், காது, கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர், பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடுடையோர், திசு பன்முக கடினமாதல், குருதி உறையாமை, அறிவாளனு இரத்தசோகை (Haemophilia) ஆகிய மாற்றுத்திறனாளி வகையினருக்கும் வாரந்தோறும் வெள்ளிக் (அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) கிழமைகளில் அறிவுசார் குறைபாடுடையோர், கற்றலில் குறைபாடுடையோர், புற உலகு சிந்தனையற்றோர்,
மன நலம் பாதிக்கப்பட்டோர், நாள்ப்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர், திசு பன்முக கடினமாதல், நடுக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டோர், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பாதிப்புடையோர் ஆகிய வகையினருக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 2025 அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து நடைபெறும்.
இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் இது நாள் வரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனுடையோர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கைப்பேசி எண், இதற்கு முன்னர் ஏதேனும் மருத்துவ சிகிச்கைகள் மேற்கொண்டிருந்தால் சிகிச்சை ஆவணங்களுடன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.