தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்கள் மூலம் ரூபாய் 11.கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கல் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 21 மாணவர்களுக்கு 2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவி களை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பேசியது உயர் கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும் இக்கல்விக் கடன் முகாம் நடத்தப்படுகிறது

இந்த முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் திட்டங்கள் வட்டி சலுகை திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக கொள்ள முடியும் இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார் இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூபாய் 2.47.கோடி வங்கி கடனுதவி களை வழங்கினார்

மேலும் இதர மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு கல்வி கடன் கல்விக் கடன் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய நிறுவனத்தின் இயக்குனர் ரவிக்குமார் தாசில்தார் மருதுபாண்டி கல்லூரி முதல்வர் ஜசக் துணை முதல்வர் மரு.ஜோசிபுரம்தொட்டு மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *