தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம், நவனாரி, மருதூர், மோளரப்பட்டி ஊராட்சிகளுக்கு ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயகூடத்தில் நடைபெற்றது.

இம்முகாமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஒன்றிய கழக செயலாளர் எஸ். சந்திரசேகரன், தலைமை பொது குழு உறுப்பினர் கே.எஸ். கருணாகரன், சடையபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ். மற்றும் நாகலிங்கம். ஆகியோருடனும் பார்வையிட்டு – உடனடி தீர்வு காணப்பட்டது மனுக்களுக்கு – உரிய பயனாளிகளுக்கு – நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதன் பின் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முடிவடைவதை ஒட்டி – இம்முகாம்களை சிறப்பாக நடைபெற்றிட பணியாற்றிய அனைத்து துறையை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் அமைச்சர் அவர்கள் நூலடை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் குமரவேல், PAP தலைவர் – கே. என். கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், மனோகரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுமதி விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், ஒன்றிய கழக நிர்வாகிகள் ராணா பத்மநாபன், செந்தில் குமார், சின்னதுரை, அருண்குமார், குணசேகரன் உள்ளிட்டர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *