திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் 9 முகாம்கள் நடைபெற்ற நிலையில் பத்தாவது முகாமாக மாணிக்க மங்கலம் ஊராட்சியில் கொட்டையூர், நாராத்தாங்குடி, மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி மற்றும் அரவூர் ஆகிய ஜந்து ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக 467 மனுக்கள் வரப்பட்டன. நிகழ்வில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அமுதா, திருவாரூர் எம் எல் ஏ பூண்டி கே.கலைவாணன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.