காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பயன்முறை தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற பயன்முறை தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி
அக்டோபர் 10 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள அத்வைதம் அரங்கத்தில், கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஆர்.வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் துறை இணை பேராசிரியர் க. பலராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் துறை தலைவர் முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து வரவேற்று
சிறப்புரையாற்றினார்.
இந்த பயன்முறை தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.