பருவ மழை அதிகமாக பெய்தால் மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்கும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம்.
திருவெற்றியூர்.
மணலி மண்டலத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் மண்டல அதிகாரி தேவேந்திரன் மண்டல குழு தலைவர் ஏ. வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. திருவொற்றியூர் எம். எல். ஏ. கே பி. சங்கர் பொன்னேரி எம். எல். ஏ. துரை சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மணலி மண்டலத்திற்குட்பட்ட மணலி, மணலி புதுநகர், மாத்தூர் பகுதிகளில் பருவ மழையினால் பாதிப்புகள் ஏற்பட்டால் அவைகளை தடுக்கும் விதமாகவும் தேவையான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீயணைப்புத்துறை காவல்துறை மின்சார வாரியம் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கொசத்தலை ஆறு மழை நீர் வடிகால் கால்வாய்கள் கரைகள் குறித்தும் புழல் உபரி நீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளினால் பருவ மழை அதிகமாக பெய்தால் மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்கும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோ தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அதேபோன்று பழுதாகி உள்ள மின் கம்பங்கள் முடியாத நிலையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் ரப்பர் படகுகள் மழை நீரை வெளியேற்றும் டீசல் மற்றும் மோட்டார்கள் சுகாதாரத் துறை சார்பில் மருந்து மாத்திரைகள் குறிப்பாக பாம்பு கடிக்கான மருந்து உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
அப்போது பாம்பு கடிக்கான மருந்து இருப்பில் இருக்கிறதா என்று பொன்னேரி எம். எல். ஏ. துரை சந்திரசேகர் கேட்டபோது சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லை என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த எம். எல். ஏ.எங்கள் பகுதியில் கிராம பகுதிகளில் குடிசைகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மழைக் காலங்களில் எங்கு செல்வார்கள் மாலை 5 மணிக்குள் பாம்பு கடிக்கான மருந்துகளை கொண்டு வந்து வைத்துவிட்டு செல்போனில் தொடர்பு கொள்ள வேண்டும் கூறினார். இதையடுத்து உடனடியாக பாம்பு கடிக்கான மருந்துகளை மாதவரம் மண்டலத்தில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை எடுத்தனர்.