தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் (11.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13 வயது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 15 கி.மீ தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும்,
15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும்
17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் நடத்தப்பட்ட இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடையும் வகையில் நடத்தப்பட்டது.
மிதி வண்டி போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- ம் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ம், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான ஆணைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ,வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற் கொடி, உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.