ரோச் விக்டோரியா கல்வெட்டு பாதுகாக்க வேண்டும் மேயர் ஜெகனிடம் கோரிக்கை.
தூத்துக்குடி நகராட்சியில் ஐந்து முறை சேர்மன் ஆகவும். சட்டமன்ற உறுப்பினராகவும் மேலவை பிரதிநிதியாகவும் தமிழக உணவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஜெ .எல். பி .ரோச் விக்டோரியா தூத்துக்குடி நகரின் வளர்ச்சி கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை.நகராட்சி அலுவலகம். தூத்துக்குடி நகருக்கு புதிய குடிநீர் திட்டம். வ உ சி சந்தை உள்ளிட்டவைகளுக்கு தன்னுடைய சொந்த இடத்தை வழங்கியவர் இந்த நிலையில் 12.9.1938 ஆண்டு வஉசி மார்க்கெட் திறந்து வைத்தார்
அதன் அடிப்படையில் மார்க்கெட்டு நுழைவு வாயிலில் கல்வெட்டு அமைக்கப்பட்டு இருந்தது மாநகராட்சி சார்பில் ரோடு உயர்த்தப்பட்ட பின்பு ஜே எல் பி ரோச்விக்டோரியா கல்வெட்டு தரையில் உள்ளது இந்த கல்வெட்டை உயர்த்தி நுழைவு வாயிலில் அமைக்க வேண்டும் என்று நெய்தல் அண்டோ மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்
கோரிக்கை மனு மீது மாநகராட்சி மேயர் ஜெகன் நெய்தல் அண்டோ இடம் விபரங்களை கேட்டு அறிந்தால் மேலும் அது போல சின்ன கோவில் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் சின்ன கோவில் வளாகத்தில் நான்கு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது பள்ளி குழந்தைகள் வெளியே வரும்போது வாகனங்கள் வேகமாக வருவதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன
ஆகையால் சின்ன கோவில் வளாகம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை விவரங்களைக் கேட்டு அறிந்த மேயர் ஜெகன் உடனடியாக ரோச் விக்டோரியா கல்வெட்டை உயர்த்தி வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவிட்டார் இந்த நிகழ்வின் போது ஆசிரியர் சேவியர்புர்னோ. சிபின்ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்