பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி வெடி விபத்து தீ தடுப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வெடி விபத்து தீ விபத்து தடுப்பது மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அடிப்படை பயிற்சி
நிகழ்ச்சி பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் , தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னணி தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பு செல்வன் , தீயணைப்பு படை வீரர்கள் முத்தழகன் ,நெப்போலியன், திவாகர், சுப்பிரமணியன், லோகநாதன், ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில் தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தும் முறை வீட்டில் பயன்படுத்தும் கியாஸ் கசிவு மற்றும் தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு மின்சார தீ விபத்து ,வாகன தீ விபத்து, தீபாவளி வெடி விபத்து , தீ விபத்தின் போது தப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் பாபநாசம் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.