திருச்சி மேலப்பஞ்சபூர் கிழக்கு தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர் ராஜு, பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த மாதவன், வாசுதேவன், சிவா ஆகிய மூன்று பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மண்ணை
க. மாரிமுத்து.