ஈரோடு மாவட்டம், அந்தியூர் கார் ஸ்டாண்ட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வக்கீலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், அந்தியூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். ஈரோடு மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, காலணியை வீசிய ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் தகுதியை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அந்தியூர் ஒன்றிய மகளிர் விடுதலை இயக்க செயலாளர் விஜயா, மாநில விவசாய அணி துணை செயலாளர் பழனிச்சாமி, ஆசிரியர் சந்தானம், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் எஸ். திருபாலா.