திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வளாகம் முன்பு தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கவிழா நடைபெற்றது.
இருசக்கர மிதிவண்டியில் தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை சீனிவாச பிரசாத் துவங்கினார்.
நிகழ்ச்சியில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி வீரசிவாஜி ராஜா போன்ஸ்லே வம்ச சுபஹான் ஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்தார்.
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மனிதவிடியல் மோகன், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்க தலைவர் மோகன்ராம், திருச்சி சுவாமிநாதன் பிள்ளை, மூத்த சமூக ஆர்வலர் கோவிந்தசாமி,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஒயிட் ரோஸ் பொதுநல சங்க தலைவர் சங்கர், சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பன், விவேகானந்தா யோகா மையம் ஸ்ரீதர், ஷாகிரா பானு,கண்ணன், சசிகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்