பெரம்பலூர்.அக்.12. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் ரூ.48.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறு பாலத்திற்கான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் இன்று (12.10.2025) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதனூர் ஊராட்சியில் ஆதனூர் முதல் மருவத்தூர் செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றும் வகையில் ஆதனூர் ஊராட்சியில் மருவத்தூர் சாலை உப்பு ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வைலை உறுதியளிப்புத்திட்டத்தில் ரூ.48.79 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் 7.5 மீட்டர் அகலமும், 16 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இந்தப்பாலம் அமைவதால் ஆதனூர் மற்றும் மருவத்தூர் மக்கள் எளிதாக சென்று வர இயலும், மழைக்காலங்களிலும், உப்பு ஓடையில் தண்ணீர் ஓடும் காலத்திலும் இனி எளிதாக சிறு பாலத்தை கடந்து பயணிக்க இயலும். குறித்த காலத்திற்குள் பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், கட்டுமானம் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் ஜெகதீசன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.