செங்குன்றம் செய்தியாளர்
தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் , செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் , வாங்க கற்றுக் கொள்வோம்
என்ற தலைப்பில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பேரிடர் காலத்தின் போது காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற இரண்டு நாள் இலவச வகுப்பு நடைபெற்றது .
இந்நிகழ்வில் வீட்டில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டர் தீப்பற்றிக் கொண்டால் எப்படி அணைப்பது எனவும், மழைக்காலங்களில் தண்ணீர் சூழம் போது எவ்வாறு தம்மையும் நமது குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்வது எப்படி எனவும் , தீயணைப்பு துறை என பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பு பணிகளில் மக்களை காப்பாற்ற செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் செய்யும் பணிகளை செயல்முறையாக செய்து காண்பித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
.இதில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு அவரவர்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் பதில் அளித்தனர். இதேபோல மாதவரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துவீரன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இலவச வகுப்பு நடைபெற்றது.