கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி‌ ஊராட்சிக்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-2001-ல் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் கடந்த பதினொரு மாதங்களுக்கு முன்பு போச்சம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் திப்பனுார் கிராமம் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் மழை வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அப்போது பழைய பள்ளி கட்டடம் பழுதாகி மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இதை அறிந்த முன்னால் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா அவர்களின் முயற்சியால் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் “தீ சஸ்டைனபிலிட்டி ஐடபிள்யூஎம் சொலுஷன்ஸ் லிமிடெட்” நிறுவனத்தின் சார்பில், திப்பனுார் கிராமத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட முன் வந்தது. தற்போது கட்டடத்தின் பணி முடிந்த நிலையில் நேற்று மாணவர்களின் பயன்பாட்டிற்குகாக கிறிஸ்துவை கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்து வைத்தார்.

இதில் பள்ளி கட்டடம் கட்டி கொடுத்த தனியார் நிறுவனத்தின் மேனேஜர், ஊழியர்கள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், கவுன்சிலர் அம்மன்ராஜா, இளையராஜா மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *