தீபாவளி கொண்டாட்டம்” மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் செயலாளர் கணகு தலைமையில் மதுரை ஆழ்வார்புரம் ஆபீசில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக குரண்டி சேர்மன் சிவசக்தி அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் வேஷ்டி, சேலை, பணம் வழங்கினார். ஜோ சங்கர் இன்னிசை கச்சேரி ஆடல் பாடலுடன் நடைபெற்றது.
விழாவில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், கவிஞர் மற்றும் இயக்குனர் ரே, இயக்குனர் காசிம் பாய், புல்லட் சாரதி, ராஜபாண்டி, சங்க துணைச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் ஷீலா, சிலம்பம் சாந்தி, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பாடகி ஜோதி, புனிதா, ஜெனிபர், மகாலட்சுமி, மணி மாலா, ரீனா மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்