ஜிபி மார்க்ஸ் செய்தியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் கிரீன் வேலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிரீன் வேலி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியை அலக்சாண்ட்ரா தங்கம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இராமநாதன் , மகேக்ஷ் ஆகியோரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். ஏராளமான பெற்றோர்கள் தற்காப்பு கலை பட்டை மற்றும் சான்றிதழ்கள் பெற்ற குழந்தைகளை பாராட்டி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் பங்கு பெற்ற தற்காப்பு கலை மாணவ, மாணவியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். தற்காப்பு கலை மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ரென்க்ஷி .ரோஸ் டியோஜின் 5 வது பிளாக் பெல்ட் அவர்களை பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். மற்றும் கிராண்ட் மாஸ்டர். கியோக்ஷி கே.கே. க்ஷியாபுதின் 8வது பிளாக் பெல்ட் மூத்த பயிற்சியாளர் மாணவர்களை தேர்வு செய்தார்.