கம்பம் நகரில் தேனி பனை நடவு 2025 சமூக நல்லிணக்க பனை நடவு நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் கெளரவிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற
தேனி பனை நடவு நிகழ்வின் முக்கிய நிகழ்வாக சமூக நல்லிணக்க பனை நடவு நிகழ்வு கம்பம் அதாயி அரபிக் கல்லூரி (தில்லாடி பாபா டிரஸ்ட் பில்டிங்) மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பில் கம்பம் 18 ஆம் கால்வாயில் நடைபெற்றது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல் நிலை அரசு ஒப்பந்ததாரர் கம்பம் ஏ.பி.அகமது பம்பஸ் அதிபர் ஏ.பி அப்துல் சமது அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்க பட்டது
