தேனி மாவட்டம் பெரியகுளம் பிரசித்தி பெற்ற அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் 29/8/25 ஆவணி 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மண்டல பூஜை தொடர்ந்து நடைபெற்று 48வது நாள் மண்டல பூஜை திங்கள்கிழமை 13/10/25 காலை 7.15மணி முதல் காலை 10.25 மணி வரை சிறப்பு யாகமும் ஹோமமும் நடைபெற்று கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாள் க்கும் அபிஷேகம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது.
வருகை தந்த பக்தர்களுக்கு முன்னால் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக அன்ன பிரசாதங்கள் வழங்கபட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவின் சார்பாக செய்திருந்தனர்.