கோவை
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி – பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு..
கோவையில் ஃபைட்டர்ஸ் (Fighters) அகாடமி சார்பாக சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கராத்தே மாணவர்களை சர்வதேச தளத்தில் உயர்த்தும் விதமாக கோவையை அடுத்த மாதம்பட்டியில் 5 வது சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ஃபைட்டர்ஸ் அகாடமி மற்றும் ஹயாசிக்கா ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்த போட்டியை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கி வைத்தார்..
5வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டா, குமித்தே என இரு பிரிவுகளாக போட்டிகள் . நடைபெற்ற போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஈரான், ஈராக்,ஓமன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஃபைட்டர்ஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் நடுவர்கள் முன்னிலையில் வீரர் வீராங்கனைகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் கவுரவ அழைப்பாளராக பா.ஜ.க.மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் கலந்து கொண்டார்..