கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், அண்ணா நகர்,நடுமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான 40 பிளாஸ்டிக் இருக்கைகளை (சேர்கள்)11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், நகராட்சியின் நகர் மன்ற துணைத்தலைவருமான த.ம.ச.செந்தில்குமார் இன்று 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களிடம் வழங்கினார்