சோழவந்தான்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகாபுரம் வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குங்குமகோதை மதுமதுராக்கு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன். 2.ல் நடந்து முடிந்தநிலையில் நேற்று 48.வது நாள் மண்டல பூஜையையொட்டி கோவில் முன்பு. சிவாச்சாரியார் மஹாபிரபுசிவம் தலைமையில் யாகசாலை தொடங்கி வேத மந்திரங்கள் ஓதப்பட்டது
பின்பு மூலவர்கள் குங்குமகோதை மதுமதுராக்கு. அய்யனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு 12.வித திரவ அபிஷேகங்கள் நடந்தேறி பின்னர் பூஜைகள் செய்தனர் இதனையெடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை மன்னாடிமங்கலம் கிராம மக்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.