கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி இன்று
அதிகாலை காலமானார் அவரின் மறைவிற்கு வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
வால்பாறை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. அமீர் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். வி. பேபி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அலி, சந்தோஷ் பிரபு, முனியாண்டி, பவுலோஸ், மைக்கேல் ராஜ், ஜெயபால் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்