கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசியதாவது….
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
நமது ஒன்றியத்தில் 54ரேசன் கடைகளில் விண்ணப்ப பதிவு செய்ய 79 முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பத்தினை பொதுமக்கள் ரேசன் கடை முகாம் அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும்.
தொடந்து இப்பணி 12நாட்கள் நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய விண்ணப்பங்களை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
கலைஞர் மகளிர் உதவித் தொகை தொடர்பாக 14 வழி காட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது தகுதியான நபர்களுக்கு கட்டாயமாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். மகளிர் உதவித்தொகை பெறுவதற்கு 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
எந்தெந்த பகுதிகளில் ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதோ அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தன்னார்வலர்களுக்கு மொபைல் செயலியில் எவ்வாறு பதிவேட்டை செய்ய வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா வரவேற்றார் . இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிறுநர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சேகர், கண்ணன்,சந்தனாலெட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் சேகர், சந்தான லட்சுமி,கண்ணன், வேளாண்மை துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், இல்கல்வி மைய தன்னார்வலர்கள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆய்வுக்கூட்டம் தில் கலந்து கொண்டனர். நிறைவாக துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.