கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்பட்டது.
மாணவர்கள் தமிழ்நாடு தினம் குறித்து ஓவியம் வரைந்தனர். அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரும் கண்டு ரசித்தனர். தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்பட்டது
.இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆ.வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார்.உதவித் தலைமை ஆசிரியர் மணிமேகலை வரவேற்றார்.
முன்னாள் கலை ஆசிரியரும் தமிழ் ஆர்வலர் கலியபெருமாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழி எழுத்துக்கள் உருவான விதம் குறித்து படத்துடன் விளக்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியதாவது தமிழ்நாடு நாள் ஜூலை 18ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்நாளை தான் தமிழ்நாடு நாள் என இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அதன் வரலாற்றினை தெரிந்து கொள்வோம்.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் இன்று ஜூலை 18 தமிழ்நாடு நாளன்று தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்.
அதுபோல மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வரவும் உயிர் தியாகங்களும் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. அப்படி தமிழ்நாடு என பெயர் சூட்ட 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை தமிழ்நாடு நாம் நாள் என்று ஒன்று கொண்டாடி வருகிறோம்.
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி பேசுபவர்கள் அதிகமாகவே இருந்தார்கள் . அதன் பிறகு மொழிகளைக் கொண்டு தனித்தனியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது இன்றைய தமிழ்நாட்டிற்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று வைக்கப்பட்டது.
அந்த நிலையில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கண்டன் சங்கரலிங்கனார் 12 கோரிக்கைகளுடன் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அன்றைய முதல்வர் நிராகரித்தார். இருந்தும் உண்ணாவிரதத்தை பின்வாங்காமல் தொடர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி உயிர்நீத்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் 1957ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன் வாக்கெடுப்பு தோல்வியை சந்தித்தது பிறகு 1961 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள் . அந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது. இதனால் அதுவும் தோல்வியை தழுவியது.
அன்றைய மெட்ராஸ் ஸ்டேட் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடுகள் என்ற பெயர் கொண்டிருந்தது என வாதம் வைத்தனர். மேலும் இப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் என்ன பயன் என்று வினா தொடுத்தனர்.
இதனை எதிர்த்துப் பேசிய அண்ணாதுரை அவர்கள் சங்க இலக்கியங்களில் தமிழ்நாடு என பெயர் உள்ளது என்று இலக்கியச் சான்றிணையம் கீழ் சபை மேல்சபை என்று இருந்த பெயர்களுக்கு எதற்கு ராஜ்யசபா, லோக்சபா என பெயர் வைக்க வேண்டும் பதிலடி கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது . அதுவும் பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றார் சென்னை செயின் சார்ஜ் கோட்டையை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என்று புதிய பெயர் பலகை மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஜூலை பதினெட்டாம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு 1968 நவம்பர் 23ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத்தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14, தேதி சென்னை மாகாண தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் போராட்ட வரலாற்றில் ஜூலை 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது தீர்மான நிறைவேற்ற பட்ட நாள் ஜுலை 18 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் தமிழ்நாடு நாளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்வி ஜாய் தற்காலிக ஆசிரியர்கள் தனலெட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.