கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை இடது கரை சினிமா தியேட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த குடிநீர் தேவையை அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி சிற்றரசு வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அப்பகுதியில் நகராட்சி மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி (சின்டெக்ஸ் டேங்) அமைக்கப்பட்டது
அந்த குடிநீர் தொட்டியிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி ஆகியோர் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன், நகராட்சி பணியாளர் சண்முக சுந்தரம் மற்றும் அப்பகுதி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
மேலும் அப்பகுதியில் உள்ள நீரூற்றிலிருந்து சுத்தமான குடிநீரை குழாய் மூலம் சின்டெக்ஸ் டேங்கிற்கு எடுத்து அதிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கி வரும் நடவடிக்கை மேற்க் கொண்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்