ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை மூன்று வட்டாட்சியர்கள் மாறிய போதும் உரிய தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!!

சிவகங்கையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நில எடுப்பு தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஏராளமானோர் நிலத்திற்கு உரிய பணம் கேட்டு வட்டாச்சியர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு காஞ்சிரங்கால் பகுதியில் 2016 இல் நிலம் கையகப்படுத்தப்பட்டது நிலத்தின் உரிமையாளர்களுக்கு 2016 இல் இருந்து நிலத்திற்கான தொகை வழங்கப்பட்டது
கடந்த ஏழு ஆண்டுகளாக10 நபர்களுக்கு 45 சென்ட் நிலத்திற்கு உரிய தொகை ரூ67,65,396 நிலம் உரிமையாளர்களுக்கு வழங்காததால் ஆத்திரமடைந்து அவர்கள் இன்றுசிவகங்கை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அதிகாரிகள் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
வட்டாட்சியர் தரப்பில் நிலம் எடுக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக பணம் வழங்கப்பட்டது, வழக்கு நிலுவையில் இருக்கும் இடங்கள், , இரட்டை பதிவு உள்ள இடம் , இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உரிமை கொண்டாடுவது போன்ற காரணங்களால் பணம் வழங்கப்படவில்லை என்றும் உரிய விசாரனை செய்தும் ஆவணங்களை ஆய்வு செய்து உரியவர்களுக்கு சட்டப்படிபணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பின் கலைந்து சென்றனர்.