ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்ல முடியாது

என குடித்துவிட்டு முத்துசாமி பேசுகிறார்.திருவாரூரில் பாஜக மாநில விவசாய அணித் துணைத் தலைவர் பேட்டி.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் செல்விஸ். தனியார் கூட்டரங்கில் பாரதியஜனதா கட்சியின் சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து மக்களை வஞ்சிக்கும் திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டிப்பதாக கூறி பாஜக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதில் மாநில விவசாய அணி மாநில துணைத்தலைவரும் அகில இந்திய தென்னை வாரியத்தின் உறுப்பினருமான இளங்கோவன் மாவட்ட தலைவர் பாஸ்கரன் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் உள்பட மத்திய மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

அப்போது பேட்டியளித்த விவசாய அணி மாநில துணை தலைவர் இளங்கோவன் காலையில் மது அருந்துபவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறியது குறித்த கேள்விக்கு அவர் குடித்துவிட்டு கூறுகிறார்

குடிக்கிறதே ஒரு பெரிய கேடு அதை காலையில் குடிக்கிறவரை சொல்லாதே மாலையில் குடிக்கிறவரை சொல்லாதே என்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.

திமுக அமைச்சர்களுக்கு வயதாகிவிட்டது இவர்களுக்கு மன வளர்ச்சி குன்றி போய் உள்ளது, என்ன பேசணும் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பல இடங்களில் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.மதக் கலவரம் மட்டும் நடக்கவில்லை ஏனென்றால் அதற்கு பிஜேபி இடம் கொடுக்கவில்லை எனவும்மேகதாது அணை கட்டுவதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறுகளும் கிடையாது அதற்காகத்தான் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி குரல் கொடுக்காத திமுக அரசை கண்டித்துள்ளோம் எனவும் மேலும் தமிழக விவசாயிகளின் உரிமையை ஒருபோதும் தமிழக தலைவர் அண்ணாமலை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று கூறினார்.

மேலும் அமலாக்கத்துறை ரைடு பழனிவேல் ராஜன் வீட்டில் நடக்கவில்லை.இவர்கள் 2007 முதல் 2011 வரை அமைச்சர் பொன்முடி பல முறைகேடுகள் செய்து பல லட்சம் டிப்பர்கள் மணல் கடத்தப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த அமலாக்கத்துறை ரைடு நடக்கிறது. உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்.திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அன்றைக்கு தேர்தல் வாக்குறுதியில் வரையறுக்க பட்டவர்களுக்கு மட்டும்தான் பணம் என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு சலுகை கிடைக்காமல் போய்விடும்.

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் அதற்கு முதல் ஆளாக பிஜேபி குரல் கொடுக்கும் என்றும் மேலும் விலைவாசி உயர்வு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நானூறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *