நாமக்கல்
வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும் அதற்கான உரிமம் பெறாமல் விற்பனை செய்ய கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா அறிவுறுத்தி உள்ளார்.
அவ்வாறு முறையான உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆய்வில் பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கு பதிவும் செய்யப்படும்.
எனவே வணிக பெருமக்கள் இம்மாதிரியான மருந்து பொருட்களை விற்பனை உரிமம் பெறாமல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இதுபோன்று எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும் (Rat Killer) விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்!
இவ்வாறு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட தலைவர்,ஜெயகுமார் வெள்ளையன் கேட்டுக்கொண்டுள்ளார்