வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்
டிஇஎல்சி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-பிறந்த
நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முன்னாள் முதல்வரும், பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். இன்ப ராஜ் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின்
பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, கவிதை போட்டி
ஆகியவைகளில் பங்கு கொண்டனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் ஆசிரியர் சம்பந்தம், ஏ. ஜி. ராஜ், சபாபதி, கலியமூர்த்தி, கே. என். ஆர். இளங்கோவன், மகாலிங்கம், ஆறுமுகம்,மோகன் உள்பட பலர் பங்கு பெற்றனர். மாணவர்களுக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் 185மாணவ- மாணவிகளுக்கு பிரஷ்
மற்றும் பேஸ்ட், மற்றும் சிற்றுண்டி சுண்டல் வழங்கப்பட்டது. வலங்கைமான் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியரும்,இந்த பள்ளியின் முன்னாள் மாணவருமான இராம. வேல்முருகன், கண்ணன்ஆகியோர் இணைந்து 200கெர்சிப் வழங்கினார்கள்.
பெற்றோர் மற்றும் முக்கியஸ்தர்களும், பாடகச்சேரியின் உதவி
ஆசிரியர் அருண் ராஜ் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஜெஸி பியூலா, பொன்ராணி, ஜேனட், செல்வி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். முடிவில் ஆசிரியர் ரமேஷ்அனைவருக்கும் நன்றி கூறினார்.