கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் (பொறு) மு.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பா.செண்பகம் முன்னிலை வகித்தார். கணித ஆசிரியர் சோ.சரவணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

மாநிலம் முழுதும் இன்று தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க இந்த சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, உடனடி தேர்விற்கு விண்ணப்பிக்காத மற்றும் வருகைபுரியாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்ந்து படிக்க விரும்பும் படிப்புகள் குறித்த வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கூட்டம் நடைபெறுகிறது.

இதன்மூலம் தமிழக அரசின் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வழி காட்டுவதன் மூலம் இடைநிற்றல் இல்லாத கல்வியை உறுதிப்படுத்த இதுபோன்ற கூட்டங்கள் பயன்படுகிறது.

இதன்படி தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இடைநிற்றல் இல்லாத ஊராட்சியாக அனைத்து ஊராட்சிகளையும் உருவாக்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களையும் பத்து, பன்னிரண்டு வகுப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து மேல் படிப்புகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் இவ் வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இல்லம் தேடிக்கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா இப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக இடைநிற்றலால் வீட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை ஊக்குவிப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

என்றும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள கந்தர்வகோட்டை, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், புதுக்கோட்டை, விராலிமலை அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், அருகிலுள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு ஐடிஐ, காரைக்குடி ஐடிஐ போன்ற அரசு நிறுவனங்களில் மேல் படிப்பை தொடர்ந்து படித்து தொழில்கல்வியின் மூலம் வாழ்வில் உயர வழிகாட்டி உள்ளார்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வீட்டிலிருந்து விடாமல் உயர் படிப்பை படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதில் தேர்ச்சியை 100 சதவீதமாக கொண்டு வருவது என்றும், அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை பாராட்டுவது என்றும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பது என்றும், முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் மூலம் பள்ளிக்குத் தேவையான வசதிகளை பெற்று பள்ளியை மேம்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பள்ளியின் சுற்றுச்சுவரை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து கட்டிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதைப்போல பள்ளியின் மீதமுள்ள சுற்றுச் சுவரின் இன்னொரு பகுதியையும் கட்டிக் கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் விளையாட்டு திடல் அமைத்து மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சிறப்பு தேர்வுகள் என்.எம்.எம்.எஸ், டிரஸ்ட் போன்ற தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிப்பது எனவும் இப்பகுதியில் ஒரு சிறந்த பள்ளியாக தொடர்ந்து செயல்பட தேவையான உதவிகளை செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் க.சத்தியபாமா, இரா.அம்பிகை ராஜேஸ்வரி, க.பாரதிராஜா, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் தன்னார்வலர் இரா.ரஷ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக அனைவருக்கும் ஆங்கில ஆசிரியர் வி.ஜஸ்டின் திரவியம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *