தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாஜக நகரத் துணைத் தலைவர் கனி வீட்டில் வைத்து நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொது செயலாளர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பால சீனிவாசன், செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து வருகிற 23ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில் நகரில் உள்ள பாஜகவினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பாஜக மாவட்ட ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், விவசாய அணி துணை தலைவர் சண்முகராஜ், விளையாட்டு திறன் மேம்பாட்டு துணைத் தலைவர் பெரியசாமி, நகர செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சண்முகையா, கலை கலாச்சார பிரிவு நகர தலைவர் பெருமாள் சாமி, ஓபிசி அணி நகர தலைவர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.