தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, நகரப் பொருளாளர் அய்யப்பன், பேரவைச் செயலாளர் சௌந்தர், பாசறை செயலாளர் நிவாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.