ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 648 பயனாளிகளுக்கு ரூபாய் 55 லட்சத்து 40 ஆயிரத்து 533 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .தி.சாருஸ்ரீ மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் வழங்கினார்கள். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் உடனிருந்தனர்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும்; ஆதிப் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் கடந்த ஜனவரி மாதம் முகாம் நடத்தப்பட்டு மாற்றத்திறனாளிகளுக்கு தேவையான உபகணரங்களின் விவரம் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், நேற்றைய தினம் (19.07.2023), 648 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், ரொலேட்டர், நடைபயிற்சி உபகரணங்கள், ஏடிஎல் கிட், ஸ்மார்ட் போன்கள், பிரெய்லி கேன், பிரெய்லி கிட், சுகம்யா கேன், காதொலி கருவிகள், செயற்கை அவயங்கள் போன்ற உதவி உபகரணங்கள் 1130 எண்ணிக்கையில் ரூ.55 லட்சத்து 40 ஆயிரத்து 533 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அலிம்;கோ நிறுவனத்திற்கும், திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகையினை திருவாரூர் மாவட்டத்தில் 5006 நபர்கள் பெற்றுவருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிவதற்கான மானியம் மற்றும் கடனுதவித்தொகை என திருவாரூர் மாவட்டத்திற்கு சுமார் 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில்; 13 நபர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது. 58 நபர்கள் வீட்டுமனை வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 30 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. மேலும், சுய தொழில் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை புரியும் மாற்றுத்திறனாளி நபர்கள் வாகனம் வேண்டி விண்ணப்பிக்கிறார்கள். இதற்கு முன் இரு கால்களும் செயலிழந்தவர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டுவந்த வாகனம் தற்பொழுது தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி விதிகள் தளர்த்தப்பட்டு ஒரு கால் செயலிழந்தவர்களுக்கும் வாகனம் வழங்கப்படவுள்ளது. இதற்கான முகாம்களும் கூடியவிரைவில் நடத்தப்பட்டு தகுதியான நபர்களுக்கு வாகனம் வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பலவித திட்டங்கள் செயல்பட்டுவருகிறது. மாற்றத்திறனாளி நபர்களாகிய நீங்கள் எந்தவித செயலும் உங்களால் முடியும் என நம்பிக்கையுடன் அனைத்து வேலையிலும் சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் .எம்.செல்வராஜ் அவர்கள் தெரிவித்ததாவது
மாற்றுத்திறனாளி நபர்கள் அறிவு நுட்பமும், தொழில் நுட்பமும் அதிகம் படைத்தவர்கள். தனித்திறன் படைத்தவர்கள் இவர்கள் ஆதலால் தான் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளி நபர்கள் என கூறினார்கள். டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சிச் செய்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயம் வளம்பெறும், சமூகம் வளர்ச்சி பெற, சமுதாயத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும், அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கின்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் .எம்.செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.செல்வகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் .கார்த்திகா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் .புவனா மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள்மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *