சிவகங்கை.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சியின் கீழ் இயங்கி வரும் நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது -என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே வாசிக்கும் கூர்ந்தாய்வு திறனை ஏற்படுத்தி பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவது அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்பதை கருத்திற்கொண்டு,
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMT) நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMT) நூலகங்களுக்கு ஒப்படைக்கும்; நிகழ்வினை நேற்று(19.07.2023) சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் மற்றும் ஓ.புதூர் ஊராட்சியிலுள்ள நூலகங்களில் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மேற்கண்ட நூலகங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள்,
புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகய் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளி மாணாக்கர்களிடையே கற்றல் அறிவினை மேம்படுத்திட வாரம் ஒரு முறை இவ்வாறான நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி பள்ளி பிரார்த்தனையில் சென்ற வாரம் படித்த புத்தகங்களில் கற்றல் அறிவு தொடர்பாக தக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும்,;
ஒவ்வொரு வாரமும் மாணாக்கர்கள் படித்த புத்தங்கள் அடிப்படையில் சிறு போட்டி நடத்தி ஊக்குவித்திடவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) குமார்,
மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.