விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடகால் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
இந்த சாலையில் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமலும் ஆம்புலன்ஸ் வாகனம் அவசர உதவிக்கு வர முடியாத நிலையும் உள்ளது பள்ளி வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் பல நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலையும் இருந்து வருகிறது இதுகுறித்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர் என பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு இவை மூன்றும் ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் ஆற்காடு-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை உள்ள அப்பம்பட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு திடீரென மக்கள் சாலை மறியலில் ஈடுபட போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
மேலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வட்டாட்சியர் கார்த்திக் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேதம் அடைந்துள்ள சாலையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துஉடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.