கோவை

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கும் டாய்ஸ் ஃபார் குட்டீஸ் திட்டம் கோவையில் துவக்கம்.

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் துவங்கிய இதில் கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவ,மாணவிகள் தங்கள் சேகரித்த பொம்மைகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவ,மாணவிகள் தங்கள் வீடுகளில் உள்ள பயன்படுத்திய ஆடைகளை சேகரித்து ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கும் புதிய திட்டம் கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் துவங்கப்பட்டது.

இந்நிலையில் இதே போல இத்திட்டத்தில் வீடுகளில் பயன்படுத்திய பொம்மைகளையும் சேகரித்து விளையாட்டு வழமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அங்கன் வாடி மையங்களுக்கு வழங்கும் வகையில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி,ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து,டாய்ஸ் ஃபார் குட்டீஸ் எனும் திட்ட துவக்க விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்துகொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதில். முதல் கட்டதாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவ,மாணவிகள் தங்கள் சேகரித்த பொம்மைகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்..இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்,ஆஸ்ரம் பள்ளி நிர்வாகிகள் தேவேந்திரன்,உதயேந்திரன் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் வீட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் விளையாட்டு பொருட்களை சேகரித்து பள்ளிகளுக்கு வழங்குவதால்,.அங்கன் வாடி மையத்தில் பயிலும் குழந்தை கல்வி மற்றும் விளையாட்டை ஊக்குவிப்பதோடு, அங்கன்வாடிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம். என. மாவட்ட ஆட்சியர். தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *