கடையநல்லூர் மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள்,சட்டங்கள் மற்றும் தொழில் நெறிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் குமரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா சமூகநலத்துறை திட்டங்கள் பற்றியும் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.சகி – ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி பெண்களுக்கான சட்டங்களான வரதட்சணை தடை சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் பணியிடங்களில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் குறித்தும் சகி ஒன் ஸ்டாப் சென்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தென்காசி மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல் மத்திய மாநில அரசு போட்டித் தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். வழக்கு பணியாளர் பானுப்ரியா குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்தும், இணையவழி பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தார்.கல்லூரி தமிழ் பேராசிரியர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார். முனைவர் சண்முக வடிவு நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் சண்முக பிரியா, பிரேமா, மாரியம்மாள், குரு சித்ரா பாரதி மற்றும் இளநிலை, முதுநிலை மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.