கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழவேண்டியே தினந்தோறும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் தங்களின் குடும்பத்தினருடன் அதிக அளவில் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் இன்று அவ்வழியாக நடைப்பயிற்சியில் சென்றவர்களின் கண்களுக்கு எதிர்பாராத வகையில் கூழாங்கல் ஆற்றில் மீன்கழிவுகள் கொட்டிக்கிடப்பதைப்பார்த்து பெரும் அதிர்ச்சி யடைந்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்
இக்காட்சியை பார்த்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெரும் வேதனைக்குள்ளாகி வரும் நிலையில் வால்பாறை நகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்