மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி வாயிலில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் இளம்பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி அரசு கல்லூரி வாயிலில் முன்பு மன்னார்குடி அரசு கல்லூரியில் மாவட்டத் துணைச் செயலாளர் வி. கனகராஜன் தலைமையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளர் க. கோபி, மாவட்ட குழு உறுப்பினர் பிரேம்குமார், மாறன், அபிரன், ஹரிஹரசுதன், சினேகிதன், திவ்யா, கபில்ராஜ் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் …..