கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் யூ.டி. டிவிஷனில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சை ஓரான் மற்றும் ஜல்சல்ராணி தேவி ஆகியோர்களின் மகள் சிறுமி அங்கீதா வயது 13 இவர் 8 ஆம் வகுப்பு வரை சிறுகுன்றா எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் படித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து வந்ததாகவும் நேற்று மதியம் சுமார் 2.30 மணியிலிருந்து காணவில்லை என்றும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காத நிலையில் அவரின் தாய் ஜல்சல்ராணிதேவி வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது