வலங்கைமானில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது.
பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் இ. மாதவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வலங்கைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசகர் பா. சிவநேசன், சங்க தலைவர் க. செல்வம், பொருளாளர் சிங்கு தெரு எஸ் .ஆர்.ராஜேஷ்,ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் நாவளவன், பெண்கள் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை லலிதா, மற்றும் இரு பள்ளிகள் ஆசிரியர்-ஆசிரியைகள்,
காவல் துறையினர் உள்பட பேரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யிலிருந்து புறப்பட்டு கடைவீதி, மகாமாரியம்மன் கோயில், நடுநாராசம் ரோடு வழியாக மீண்டும்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை
பேரணி அடைந்தது.