எஸ். செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்
சிறப்பு வழிபாடு.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து மண்டலபிஷேகம் பூர்த்தி விழா மூன்று நாட்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை முத்து சட்டநாத சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து முத்து சட்டநாதர்சுவாமிக்கு இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் எதாஸ்தானத்திலிருந்து முத்து சட்டை நாதர் சுவாமி புறப்பாடாகி உற்சவம் மண்டபம் எழுந்தருள அங்கு சுவாமிக்கு 51 வகையான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், புனித நீர் அடங்கிய 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பட்டு வஸ்திரம், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தர்மபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *