வலங்கைமான், ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.
கடந்த ஜூன் மாதம் 12-ம்தேதி மேட்டூர் அணையை
திறந்து வைத்த தமிழகமுதல்வர் மு. க. ஸ்டாலின்
ரூ. 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.
குறுவை நெல் சாகுபடிமேற்க் கொள்ளப்படும்மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், யிலாடுதுறை,ஆகியவற்றின் அனைத்து வட்டாரங்களிலும், கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் டெல்டா வட்டாரங்களிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பயிர்களின் வளர்ச்சியிலும், மகசூல் பெருக்கத்திலும் உரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அவசியமாகின்றன. இந்த சத்துக்களின் பற்றாக்குறையால், கணிசமான அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. பேரூட்ட
சத்துக்கள் பொதுவாக, அடியுரமாகவும் இடப்படு
கின்றன. எனவே பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து, அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்திட ஒரு ஏக்கருக்கு யூரியா-45கிலோ, டி.ஏ.பி-50கிலோ,பொட்டாஷ்-25கிலோ வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட தொழுவூர், வலங்கைமான், விருப்பாட்சிபுரம், செம்மங்குடி உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி திமுக
நகர செயலாளர் பா. சிவநேசன் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டுறவு கடன் சங்க செயலாளர்
பா. கலைவாணர் வரவேற்று பேசினார்.
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரங்களை திமுக மேற்குஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் வழங்கினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கே. தனித்தமிழ் மாறன் மற்றும் முன்னோடி விவசாயிகள் கோபால
கிருஷ்ணன், சாமிநாதன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேபோல் புளியகுடி, ஆலங்குடி, திருவோண மங்கலம், சாரநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கான ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் கார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க செயலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.
இதில் விவசாயிகளுக்கு திமுககிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி உரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜ், ரஞ்சித், சுரேஷ், அன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.