கோவை

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 10லட்சம் பஜாஜ் பல்சர் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் வரிசையில் இந்த இலக்கினை பஜாஜ் பல்சர் மட்டுமே எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கோவை சரவணம்பட்டி யிலுள்ள புரோஜோன் மாலில்
பல்சர் மேனியா 2.0நிகழ்வு ஜுலை 22 சனிக்கிழமை கோலகலமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியிலுள்ள சேலஞ்ச் ஜோன், த்ரில் ஜோன்,ஸ்டண்ட் ஜோன் மற்றும் ஸ்டைல் ஜோன் களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சாகச வீரர்கள் சர்க்கிள் வீலிங், ஐசேர் மேன்ட், ஷியூமன் காம்பஸ் போன்ற சாகசங்களை செய்து வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

தமிழகம் முழுவதும கொண்டாடிய”பல்சர் டே”ன்ஒர் அங்கமாக இந்நிகழ்வில் 100 பல்சர் வாகனங்களை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது


மாலை 4மணி முதல் 8மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *