மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய மாநில ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்…
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் சார்பாக, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய மாநில ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் TMS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இதில், அனைத்து கிருஸ்துவ கூட்டமைப்பு, காங்கிரஸ் கட்சி, பல்சமய நல்லுறவு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்..
ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாதமாக நடைபெறும் கலவரத்தைக்கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில பிரோன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா அரசை கலைக்க வேண்டும். மாநில அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதே கலவரம் தொடர காரணம் எனவே ஒன்றிய அரசு உடனடியாக அனைத்து கட்சிகளையும் இணைத்து நல்லெண்ண குழுவை ஏற்படுத்தி மைத்தி, குக்கி நாகா இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத வெறுப்பை மக்களிடம் பரப்பி கலவரம் ஏற்படகாரணமாய் இருந்த RSS அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட மதவாத அடிப்படைக் குழுக்களை N.I.A விசாரணைக்கு உள்படுத்தி கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்ப பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் A.K.சுல்தான் அமீர், கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் அருட்தந்தை சகாயராஜ், கலை இலக்கிய பொது மன்ற தலைவர் தோழர் ரமணி, தேசிய சர்வ சமய மத நல்லிணக்க நட்புறவு பேரவையின் நிறுவனத் தலைவர் M.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் மாநில துணைச் செயலாளர்கள் A.அப்துல் பஷீர், ATR.பதுருதீன், தொழிற்சங்கம் மாநிலத் துணைச் செயலாளர் M.I.ஹக்கீம், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் சையது இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை S.ஷாஜகான், மாவட்ட பொருளாளர் K.A.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம், பைசல் ரகுமான், நவபல் பாபு, முகமது மன்சூர், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.