கழகுமலையில் திமுக அரசை கண்டித்து
காந்தி மைதானத்தில் பாஜக சார்பில் தூத்துகுடி மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து தமிழகத்தில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1000 பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய பொது செயலாளர் சதீஷ், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தமிழர்சிவா, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சிவகுருநாதன், கூட்டுறவு பிரிவு விஸ்வநாகராஜன், மீனவரணி சார்பில் ராமலிங்கம், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மாரிகார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கழுகுமலை அருகே உள்ள செட்டிகுறிச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம்,வெங்கடேஸ்வரபுரம், வானரமுட்டி, வேலாயுதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.