கோவை
மகளிர் உரிமை திட்ட விண்னப்ப பதிவு முகாம்- நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர்.
கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமை மாநகராட்சி ஆணையாளர் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மற்றும் செம்பட்டி காலனி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் சுகாதார ஆய்வாளர் தனபால் உட்பட திமுக கழக நிர்வாகிகள் முத்து முருகன், முருகேசன், தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.