எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார்.

தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதிமுதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக, விண்ணப்ப பதிவு மாதிரி முகாம்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார். தொடர்ந்து விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் விண்ணப்பிக்க காத்திருந்தவர்களை சந்தித்த அவர் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அனைவரும் விண்ணப்பித்ததற்கு உரிய ரசிதை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தகுதியுள்ள அனைவருக்கும் பண வழங்கப்படும் என தெரிவித்து சென்றார்